சவுக்கில் வேர் அழுகல் ஏன் ஏற்படுகிறது? தடுப்பது எப்படி?

சவுக்குத்தோப்புகளில் அதிகப்படியான நீர் தேங்குவதால், வேர் புறணி அழுகிவிடுகிறது. அதனால், ஃப்யூசேரியம் ஆக்சிஸ்போரம் என்னும் பூஞ்சாண நோய்க்கிருமி தாக்குவதால், வேர் அழுகல் ஏற்படுகிறது. இதனைக்கட்டுப்படுத்த நீரை முழுவதுமாக வடித்து விடவும். பின்னர், மரத்துக்கு 20மி.லி. அல்லது 20 கிராம் வீதம்  டிரைகோடெர்மா விரிடி அல்லது பாவிஸ்டின் 0.1% கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம்.