விவசாய நிலத்தில் ஊடு பயிராக சந்தனம் வளர்க்கலாமா?

ஆம். சந்தன மரத்தை வேளாண்காடு வளர்ப்பில் 5 x 5 மீட்டர் இடைவெளியில்       சவுக்கு, கருவேல், புங்கம், மலைவேம்பு, வெப்பாலை, மஞ்சள்கொன்றை போன்ற ஓம்புப்பயிர்களுடன் சேர்த்து சாகுபடி செய்யலாம். இவை சந்தனத்தின் ஆரம்ப கட்ட வளர்ச்சிக்குத் தேவையான நுண்ணூட்டங்களை அளிக்கின்றன.