தேக்கில் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்துவது எப்படி?

தோப்பிலும், அதனை சுற்றிலும் களைகள் இல்லாமல் இருக்க வேண்டும். தொடர் கண்காணிப்பும் ஆரம்ப அறிகுறிகளை கண்டறிவதும் அவசியம். தாக்குதல் தென்பட்டதும் கடைகளில் கிடைக்கும் பூஞ்சாணக்கரைசலை தண்டுப்பகுதி முழுதும் தெளிக்க வேண்டும். துளைகளில் பூஞ்சாணக்கரைசலை ஊசிமூலம் செலுத்தி மூடி விடவும். கார்பரில் போன்ற பூச்சிக்கொல்லிகளை துளைகளில் ஊற்றியும் கட்டுப்படுத்தலாம்.