வேளாண்காடு வளர்ப்பில் உரச்செலவு குறையுமா?

குறையும். வேளாண்காடு வளர்ப்பின் முக்கிய நோக்கங்களில் ஒன்று இடுபொருள் தேவைக்கு வெளியில் சார்ந்திருப்பதை குறைப்பதும் ஆகும். இந்த வேளாண்காடு வளர்ப்பில் ஒரு அங்கத்தின் வெளியீடு மற்றொரு அங்கத்திற்கு உள்ளீடாக அமையும். உதாரணமாக, கால்நடைகள் வளர்ப்பதன் மூலம் வரும் தொழு உரம், பண்ணையின் உரச்செலவைக் குறைக்கிறது.