An open source content management platform.
இல்லை. யூக்கலிப்டஸ் நிலத்தடி நீர் மட்டத்தை உறிஞ்சுவதில்லை. சுமார் 90% வேர்கள் 5 மீட்டருக்குள்ளாகவே நின்று விடுகின்றன. வெறும் 10 % வேர்களே 10 மீட்டர் ஆழம் வரை செல்கின்றன. எனவே, யூக்கலிப்டஸ் மரம் நிலத்தின் 10 மீட்டருக்கு உட்பட்ட மேல் மட்டத்தில் உள்ள நீரையே பயன்படுத்திக் கொள்கிறது. இது நீரை திறன்மிகுந்த முறையில் பயன்படுத்தும் மரவகையாகும். குறைவான நீராவிப்போக்குக்கு, இதன் இலைகளின் தகவமைப்பே காரணமாகும். இது எடுத்துக்கொள்ளும் நீரை திறம்பட பயன்படுத்தி, அதிக அளவில் உயிர் எடையாக மாற்றுகிறது.