’ நாட்டு சவுக்கு’, ஜுங்குனியானா சவுக்கு - இவற்றில் எது சிறந்தது?

’நாட்டுச் சவுக்கு’ என விவசாயிகளால் குறிப்பிடப்படும்   கேசுரினா ஈக்விசெட்டிபோலியா சவுக்கு, கடலோர பகுதிகளுக்கும், நல்ல பாசன வசதி உள்ள நிலப்பகுதிகளுக்கும் ஏற்றது

கேசுரினா ஜுங்குனியானா சவுக்கு, உள்மாவட்டங்களுக்கும், குறைவான பாசன வசதி உள்ள பகுதிகளுக்கும் ஏற்றது. அத்துடன் ஜுங்குனியானா சவுக்கு, ஈக்குசெட்டிஃபோலியா சவுக்கை விட வேகமாக வளரக்கூடியது.