An open source content management platform.
தேக்கில் பல ரகங்கள் இல்லை. பொதுவாக தேக்கு மரத்தை அவை விளையும் இடத்தை பொருத்து சந்தையில் வகைப்படுத்துகிறார்கள். உதாரணமாக, நிலம்பூர் தேக்கு, பர்மா தேக்கு, பிரேசில் தேக்கு, ஆப்பிரிக்கத் தேக்கு என பலவற்றைக் குறிப்பிடலாம். ஆனாலும், தேர்ந்தெடுக் கப்பட்ட சிறந்த தேக்கு மரங்களில் இருந்து, திசுவளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் நாற்றுகளுக்கான தேவை தொடந்து அதிகரித்துக்கொண்டு வருகிறது. IFGTB மற்றும் பிற அரசு நிறுவனங்கள் உருவாக்கி விற்பனை செய்து வரும் திசு வளர்ப்பு தேக்கு நாற்றுகளை தரமான மரக்கன்றுகளாக பயன்படுத்தலாம்.