மரத்தோட்டங்களில் மூலிகைப் பயிர்களை ஊடுபயிராக வளர்க்கலாமா?

மூலிகைச் செடிகள் பெரும்பாலும் பண்ணைக்காடுகள் வளர்ப்பிலேயே சாகுபடி செய்யப் படுகின்றன. இஞ்சி, மஞ்சள், ரோஸ்மேரி போன்றவற்றை  வேளாண்காடு / பண்ணைக் காடுகள் முறையில் வளர்ப்பது  குறித்து நிறைய ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இருப்பினும், அதன் விற்பனை வாய்ப்புகளை தெரிந்து கொண்டு, விளைபொருள் கொள்முதல் செய்யப்படுவதை முன்னதாகவே உறுதி செய்துகொள்ள வேண்டும்.