அறிமுகம்

நம் நாட்டில் வேளாண் பயிர்கள் சூறாவளி காற்றின் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்பிற்கு சேதம் அடைவதாக தெரிவிக்கப்படுகிறது. அதிக வேகமாக காற்று வீசுவதால், குறிப்பாக வாழைத் தோட்டங்களில் பலத்த சேதாரம் ஏற்படுகிறது. தொடர்ந்து ஏற்படும் இத்தகைய சேத இடர்பாட்டை திறம்பட சமாளிக்கும் வண்ணம், வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், தனது ஆராய்ச்சியின் விளைவாக, ஐந்து வீரிய ரக ஜுங்குனியானா சவுக்கு குளோன்களை வெளியிட்டுள்ளது. இவற்றின் மூலம் தோட்டக்கலை மற்றும் விவசாய பயிர்களுக்கு (வாழை, எலுமிச்சை, துவரை முதலியன) புயல் மற்றும் சூறாவளி காற்றில் இருந்து பாதுகாப்பளிக்க முடிகிறது. சவுக்கு சார்ந்த காற்றுத் தடுப்பு மர ரகங்களை பண்ணை நிலங்களின் வெளிச் சுற்றுப் பகுதிகளில் நடுவதன் மூலம் காற்றின் வேகத்தை பெருமளவில் மட்டுப்படுத்துவதோடு, பணப் பயிர்களுக்கு ஏற்படும் சேத அளவையும் குறைக்கலாம். இத்தகைய காற்றுத் தடுப்பு குளோன்கள், பயிர்களின் நீராவிப் போக்கை குறைப்பதோடு, மண்ணின் ஈரப்பதத்தையும் தக்க வைக்கிறது. இதன் மூலம் வேளாண் பயிர்களின் உற்பத்தித்திறன் 10 முதல் 30 சதவீதம் அதிகரிக்கிறது.

இரகங்களின் பெயர்கள்

 IFGTB-WBC 1, IFGTB-WBC 2, IFGTB-WBC 3, IFGTB-WBC 4 மற்றும் IFGTB-WBC 5

இரகங்களின் மேன்மை பண்புகள்

   வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் காற்றுத்தடுப்பு மர இரகங்கள் அதிக அளவில் கிளை பரப்பும் ஆற்றலை பெற்றிருக்கின்றன. மரத்தின் அடிப்பாகத்திலிருந்து 3 மீட்டர் உயரம் வரை சுமார்  40-50 எண்ணிக்கையில் கெட்டியான, ஒரு போதும்  உதிராத கிடைமட்டக் கிளைகளைக் கொண்டுள்ளன. இதன் பிற மேம்பட்ட பண்புகளாவன;

  1. சிறந்த கிளைத் தடிமன்
  2. கிடைமட்ட கோணத்தில் கிளைக்கும் பக்கக் கிளைகள்
  3. சிறந்த உயர வளர்ச்சி விகிதம் (ஆண்டுக்கு 2.5 முதல் 3 மீ உயரம் வரை வளரும் தன்மை)
  4. சிறந்த தண்டு வளர்ச்சி (ஆண்டுக்கு 1.5 முதல் 2 செ.மீ விட்டம் வரை)

பழத்தோட்டங்களுக்கான காற்றுத் தடுப்பான்கள்

 பழத் தோட்டங்களின் உற்பத்தியை காற்றுத் தடுப்பான்கள் வெகுவாக அதிகரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பழ மரங்கள் ஆரம்ப நிலையில் உயிர் பிழைப்பதற்கும், பிறகு போதுமான வளர்ச்சியை அடைவதற்கும், ஆண்டு முழுவதும் பயிர் பாதுகாப்பு அவசியம். காற்றுத் தடுப்பான்கள் பழத் தோட்டங்களின் அகச்சுழலை மேம்படுத்துவதன் மூலம், மகரந்தச் சேர்க்கைக்கான வாய்ப்புகளை அதிகரித்து அதிக காய்கள் பிடிப்பதை உறுதி செய்கின்றன. இதனால் அதிக பழ மகசூல் கிடைக்கிறது.

     அதிவேக காற்றினால் பழத்தோட்டங்களில், இலைகள், கிளைகள், மொட்டுகள், பூக்கள் மற்றும் பழங்கள் ஆகியவை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்வதால் பயிருக்கு பலத்த சேதம் உண்டாகிறது. காற்றுத் தடுப்பான்கள் மூலம் காற்று வீசும் வேகத்தை குறைப்பதால் பழத்தோட்டங்களில் ஏற்படும் பூ, பிஞ்சு, காய் உதிர்வு குறைவது கண்டறியப்பட்டுள்ளது.

தூசு மாசேற்றத்தை காற்றுத் தடுப்பான்கள் மூலம் குறைத்தல்

காற்றில் எற்படும் தூசு  மாசேறறத்தை வனமரபியல் மற்றும் மரப்பருக்கு நிறுவனத்தின் காற்றுததடுப்பு மர இரகங்கள் பெருமளவில்குறைக்க உதவுகின்றனதென்னைநர் தொழிற்சாலைகள்மணல் அரைப்பு ஆலைகள் மற்றும் கோழிப் பண்ணைகளுக்கு அருகில் சாகுபடி செயயப்படும் வேளாண் பயிர் வயல்களில் ஏற்படும் தூசு மாசேற்றத்தை திறம்பட குறைக்க உதவுகின்றனவனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் காற்றுத்தடுப்பு மர இரகங்கள் அதிக எண்ணிக்கையில் கிளைகளை பரப்புவதோடுநீண்ட காலத்திற்கு அவற்றை உதிராமல் வைத்திருக்கும் சிறப்பியல்பு காரணமாக தூசுகளை திறம்பட தணிக்க முடிகிறது.