நடவு

காற்றுத்தடுப்பு அமைத்தல்

நன்கு உழுது நிலத்தை பண்படுத்திய பின் மூன்று வாய்க்கால்களை 50 செ.மீ. அல்லது 1 மீட்டர் இடைவெளிகளில் பண்ணை ஓரத்தில் அமைக்க வேண்டும். ஒவ்வொரு வாய்க்காலிலும் 2 மீட்டர் இடைவெளியில் வீரியரக சவுக்கு குளோனல் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். இந்த நாற்றுகளை வரிசைக்கு வரிசை பார்த்தால் ஏற்ற இறக்க வடிவத்தில் இருக்கும்படி நடவு செய்ய வேண்டும். இதன்படி அமைக்கையில் ஒரு ஏக்கருக்கு மர எண்ணிக்கை 380 ஆக இருக்கும். குறைவான நிலமே உள்ள நிலையில் இரண்டு வரிசை காற்றுத் தடுப்பான் வளர்ப்பும் பரிந்துரைக்கப்படுகிறது. அதன்படி வரிசைக்கு வரிசை 50 செ.மீட்டரும், செடிக்குச் செடி 2 மீட்டரும் உள்ள இடைவெளியில் சாகுபடி செய்யலாம்.