சாகுபடி முறை

பராமரித்தல் 

காற்றுத் தடுப்பான் மரங்களுக்கு முதலாம் ஆண்டில் வாரம் ஒரு முறையாவது நீர் பாய்ச்ச வேண்டும். இரண்டாம் ஆண்டிலிருந்து அதற்கென தனியாக பாசனம் செய்ய வேண்டியதில்லை. அதற்குள் சாகுபடி செய்யப்படும் பயிருக்கு செய்யப்படும் பராமரிப்பே போதுமானது. கோடை மற்றும் வறட்சியான காலங்களில் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பருவ மழைக்கு முன்பும் பின்பும் களையெடுத்து மண் வேலை செய்வது அவசியம். தேவைப்பட்டால் உள் வரிசை மரங்களில் கிளை அடிப்பகுதியிலிருந்து 1 முதல்  1 ½  அடி விட்டு மிதமான அளவில் கவாத்து செய்து கொள்ளலாம்.

பயிரின் உற்பத்தி திறன் 

 திறந்த நிலை வயல்களில் சாகுபடி செய்யப்பட்ட துவரையின் (CO-8 ரகம்) மகசூல் அளவை விட, காற்றுத் தடுப்பான்களுக்கிடையே சாகுபடி செய்ததில் ஒன்றரை மடங்கு அதிக மகசூல் கிடைப்பதாக விஞ்ஞான ஆய்வுகளின் முடிவுகள் நிரூபித்துள்ளன.

     பயிர் சாய்வதும் தடுக்கப்பட்டது. அத்துடன் பாசனத்துக்கு பிந்தைய மண்ணின் ஈரப்பதம், திறந்த நிலை வயல்களை விட, காற்றுத் தடுப்பான்களுக்கு இடையேயான வயல்களில் மேலும் அதிக நாட்களுக்கு நிலைத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதிலிருந்து காற்றுத் தடுப்பான்கள் பயிர் பாதுகாப்பை வழங்குவது மட்டுமின்றி பயிர் உற்பத்தித் திறனையும் கூட்டுவதை அறியலாம்.