An open source content management platform.
பூச்சிகளின் தாக்கம்
காஸஸ் கடம்பேவால் என்ற தண்டு துளைப்பான் பூச்சியானது கடம்பு மரங்களில் முதன்மையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகும். இப்பூச்சிகளால் உண்டான பாதிப்புகளால் முழுமையான மரங்கள் கூட இறக்க நேரிடுகின்றன. ஆகஸ்ட் முதல் ஜனவரி வரை இப்பூச்சிகள் அதிகம் காணப்படும் காலங்களாகும். காஸஸ் கடம்பேயினால் தாக்கப்பட்ட மரங்களில் உள்ள துளைகளால் மரங்கள் பாதிப்படைகின்றன. ஆரம்ப நிலைகளில் இதன் தாக்கம் குறைவாக இருந்தாலும் இவை தாக்கிய மரங்களை மறுபடியும் தாக்கி அருகில் உள்ள நல்ல மரங்களும் தாக்கப்பட்டு இறுதியில் இறக்க நேரிடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது.
வயதான பெண் பூச்சியானது இம்மரங்களின் பட்டைகளிலும் காயங்கள் உள்ள இடங்களையும் தேர்வு செய்து முட்டைகளை இடுகின்றன. முட்டைகளிலிருந்து வெளிவரும் புழுக்கள் 8 மாத காலம் வரையில் புழுக்கள் நிலையிலையே இருக்கின்றன. இதன் பிறகு இப்புழுக்கள் கூடு நிலைக்கு மாறுகின்றன. இப்பூச்சிகள் தன் மேல் கூண்டு போல் முழுவதும் மூடிக்கொண்டு உள்ளே வாழ்கின்றன. இப்புழு முழு வளர்ச்சியடைந்த பின் இக்கூட்டின் முகப்பு திறக்கப்பட்டு உள்ளே உள்ள பூச்சிகள் வெளியேறுகின்றன. சிறிது காலத்திற்குப் பின்னர் முழு இளம் பூச்சிகளாக உருவெடுக்கின்றன.
பூச்சிகளை கட்டுப் படுத்தும் முறைகள்
காஸஸ் கடம்பேவால் தாக்கப்பட்ட மரங்களின் தன்மையை ஆராய்ந்து அருகில் உள்ள மரங்களில் இப்பூச்சிகளின் தாக்கம் ஏற்படாமல் தடுக்கலாம். இப்படியாக இப்பூச்சிகளின் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அடுத்து வரும் நாற்றாங்கால்களில் இம்முறையைப் பயன்படுத்தி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாம். மேலும் கிளை நீக்கம் செய்வதால் ஏற்படும் துளை மற்றும் காயங்களின் வழியாக இப்பூச்சிகள் உள்ளே நுழையக்கூடும். இதனால் கிளை நீக்கம் செய்யும் போது மரப்பட்டையில் காயம் செய்வதை தவிர்க்க வேண்டும். இப்பூச்சிகளைத் தடுக்கும் விதமாக பூச்சிக் கொல்லிகளான கார்பைரில் , அஸிபெட் , பென்வாலரேட் , மற்றும் பெர்மெத்ரின் போன்ற பூச்சிக் கொல்லிகளை 0.2% அளவில் இளஞ்செடிகளிலேயே தெளிப்பதால் இம்மரங்கள் இப்பூச்சிகளின் தாக்குதலில் இருந்து தப்பிக்கின்றன. இதனால் மரப்பட்டைகளில் உள்ள இதன் கூடுகள் மற்றும் முட்டைகளை முழுவதுமாக அழித்து விடலாம். இரண்டு வார இடைவெளிகளில் இதன் தாக்கத்தை பரிசோதித்து தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.