பூச்சி, நோய் நிர்வாகம்

பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல், கட்டுப்படுத்தும் முறைகள்

        நாற்றங்காலில் பல்வேறு வகையான பூஞ்சைகள் தாக்குதலால் நாற்றுகளுக்கு தண்டு கொப்புள நோய், வேரழுகல், இலைக் கருகல் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இலைக்கருகல் நோய், மழைக்காலங்களில் ஒட்டுமொத்த நாற்றங்கால் முழுவதும் பரவக்கூடியது. சுகாதாரமான நாற்றங்கால் மற்றும் சீரான நீர்ப்பாசனம் ஆகியவை அவசிய தேவையாகும்.

        நடவு செய்யப்பட்ட நாற்றுகளிலும், மரங்களிலும் கறையான்கள் பலத்த சேதத்தை ஏற்படுத்துகின்றன. எனவே கறையான்களை வேதி மருந்துகள் மூலம் கட்டுப்படுத்துவது அவசியம். தைல மரங்கள் அவற்றை துளைக்கும் பூச்சிகளால் அதிக அளவில் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இந்த பூச்சிகள் நடுத்தண்டு, இலைக்காம்பு மற்றும் இளம் தண்டுகளில் தாக்கி, முடிச்சு போன்ற அமைப்பை தோற்றுவிக்கின்றன. இது நடவு செய்யப்பட்ட நாற்றுகளையும், மறுதாம்பு கிளைகளையும் வெகுவாக பாதிக்கக்கூடியவை. இவற்றை வேதி மருந்துகளால் கட்டுப்படுத்துவது கடினம் என்பதால், இவற்றை எதிர்க்கும் தன்மை கொண்ட குளோனல் நாற்றுகளை நடுதல் வேண்டும்.