அறுவடை

அறுவடை

 தமிழ்நாட்டில் 1990-களின் தொடக்கத்தில் விதைவழி நாற்று சாகுபடி முறையில், ஒரு ஹெக்டேரில் 7 ஆண்டு சாகுபடிக் காலத்தில், சுமார் 10 முதல் 15 டன் மரங்கள் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது. ஆனால் புதிய புரட்சிகரமான குளோனல் தொழில்நுட்பம் மூலமாக, சாதாரண வளம் உள்ள மண்ணில் கூட, யூக்கலிப்டஸ் மரத்தின் உற்பத்தியானது 6 ஆண்டுகள் சாகுபடிக் காலத்தில் ஒரு ஹெக்டேருக்கு 60 டன்கள் என்ற அளவில் உயர்த்தப்பட்டுள்ளது. நல்ல மண்வளமும், உபரி நீர் வளமும் இருந்து, 5 ஆண்டு சாகுபடி சுழற்சி காலத்தில் தக்க சாகுபடி முறைகள் மூலம் உற்பத்தி, உச்சபட்சமாக 175 டன்/எக்டர் என்ற சாதனை அளவை எட்ட முடியும்.

 தற்போதைய நிலவரப்படி, 3,100 ஹெக்டேரில் ஆண்டுக்கு 60 லட்சம் டன், IFGTB EC 4 ரக மரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இது விவசாயிகளுக்கு முன்பை விட ஒரு ஹெக்டேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் லாபம் ஈட்டித் தருகிறது.