An open source content management platform.
வளர்ச்சி விவரம்
சுற்றுப்புற சூழல், மண் வளம், பாசன வசதி, ஆகியவற்றைப் பொருத்தும் வேறுபடுகிறது. உகந்த சூழ்நிலைகளில் சரியான இடைவெளிகளில் வளர்க்கப்படும் தோப்புகள் நல்ல வளர்ச்சி விகிதத்தை அடைகின்றன. பாசன வசதியுள்ள தோப்புகளில் 82 செ.மீ. மார்பு சுற்றளவும் மானவாரி நிலங்களில் 48 செ.மீ மார்பு சுற்றளவும் ஐந்தாம் ஆண்டு முடிவில் கிடைக்கின்றன.
வேளாண்காடு வளர்ப்பு
மலைவேம்பு வேளாண்காடு வளர்ப்புக்கு ஏற்றது. தென்னை, நிலக்கடலை, உளுந்து மற்றும் பச்சை பயிறு ஆகியவற்றுடன் ஊடுபயிராக வளர்க்கலாம். சவுக்கு, வாழை, கரும்பு, முருங்கை மற்றும் மாந்தோப்புகளில் வரப்பு ஓரங்களில் வளர்க்கலாம். மலைவேம்பு தோப்பின் ஊடாக மஞ்சள், தக்காளி மற்றும் பப்பாளி ஆகியவற்றை வளர்க்கலாம். காப்பி மற்றும் தேயிலை தோட்டங்களில் நிழல் மரமாகவும் வளர்க்கப்படுகிறது.