An open source content management platform.
அறுவடை
கர்நாடக மாநிலம் அன்சூரில் உள்ள ஒட்டுப்பலகை நிறுவனம்,1995இல் நடப்பட்ட மலைவேம்பு தோப்பில் இருந்து 15 ஆண்டுகள் வயதுடைய மரங்களை அறுவடை செய்த தரவுகளிலிருந்து இவ்விவரம் பெறப்பட்டது. ஆய்வுக்கு 10 மரங்கள் தேர்வு செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டன.
மரங்களின் சாரசரி பூட்டு நீளம் = 8.90 மீட்டர்
100 செ.மீ சுற்றளவு உள்ள பூட்டின் மர அளவு = 15 கன அடி
சுமார் 40 செ.மீ சுற்றளவு உள்ள பூட்டுகள் ஒரு டன் ரூபாய் 2000 என்ற விலையில் தீக்குச்சி ஆலைக்கு விற்பனையாகின்றது
மேற்கூறிய வளர்ச்சி விகிதத்தை நன்கு பராமரிக்கப்பட்டு, குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் நன்கு பாசனம் செய்யப்பட்ட மலைவேம்பு தோட்டங்களில் மட்டுமே எதிர்பார்க்க முடியும். சுமாரான மண்வளம் நீர்தேங்கியிருத்தல் மற்றும் களைச் செடிகள் அகற்றப்படாமல் இருத்தல் ஆகிய நிலைமைகளில் மகசூல் வெகுவாக பாதிக்கப்படும்.5 மீட்டர் இடைவெளியில், பண்ணை ஓரங்களில் நடப்பட்ட 60 மலைவேம்பு மரங்களிலிருந்து 6 ஆவது ஆண்டில் சுமார் ரூ.2 லட்சம் வருமானமாக பெற இயலும். தோப்பு மரங்களை காட்டிலும் வேலி ஓர மரங்கள் நன்கு வளர்ச்சியடைகின்றன. 30 ஆண்டுகள் பராமரிக்கப்படும் மலைவேம்பு தோப்புகளிலிருந்து, மரத்தின் அதிகப் பயன்பாட்டுத் தன்மை காரணமாக ஒரு கன அடி ரூ.650/- என்ற அளவில் மரத்தின் மதிப்பு கூடுகிறது.
ஒட்டுப்பலகை உற்பத்தியாளர்களால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் வயல்வெளி ஆய்வுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட பொருளாதார கணக்கீடு (2013-2014)
(i) ஊடுபயிர் இல்லாத தோப்பு சாகுபடி (5 ஆண்டுகள்)
ஹெக்டருக்கு 80 டன்கள் என்ற விகிதத்தில் இறுதி
அறுவடை மூலம் வருமானம் : ரூ.6,00,000 ( ரூ. 7500/டன் )
(ii) ஊடுபயிர் இல்லாத தோப்பு சாகுபடி (15 ஆண்டுகள்)
ஒரு கன அடி ரூ.375/-வீதம் இறுதி அறுவடை மூலம் வருமானம்: ரூ. 15,50,00/-
பின்குறிப்பு :
ஒட்டுப்பலகை தயாரிக்க ஏற்ற தரத்தை பொருத்து ஒரு கனஅடி ரூ.375/- முதல் ரூ.700/- வரை வேறுபடுகிறது.
* மேலே தரப்பட்டுள்ள தரவுகள் அப்போதைய சந்தை மதிப்பை அடிப்படையாகக் கொண்டவை. இதில் விலை ஏற்ற இறக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக ஒரு டன் விலை ரூ.6000/- முதல் ரூ.7500/- வரை உள்ளது.