அறிமுகம்

மலைவேம்பு வேகமாக வளரக் கூடிய, குறைந்த சாகுபடிக்காலம் கொண்ட உள்நாட்டு மரவகையாகும். இம்மரம் 15 ஆண்டு முடிவில், சுமார் 15 க.அடி உள்ள வளர்ச்சியை எட்டும். ஒரு கன அடி மரம் ரூ.200 என்ற அளவில் விற்பனையாகிறது. ஒட்டுப்பலகை தயாரிப்பில் முன்னுரிமை பெற்ற மரவகை ஆகும். இம்மரம் பெட்டிகள், கூரைப் பலகைகள், கட்டுமானப் பொருட்கள், வேளாண் கருவிகள், பென்சில், தீப்பெட்டி, கட்டுமரம், இசைக் கருவிகள் தயாரிப்பு போன்றவற்றிற்கு பயன்படுகிறது. பன்முக பயன்பாடு காரணமாக இதன் சந்தை மதிப்பு உயர்ந்து வருகிறது. இம்மரம் அதிகமான காய்ப்புத்திறன் கொண்டு இருந்த போதிலும் இதன் மிகக் குறைவான முளைப்புத்திறன் சவாலாக உள்ளது. இதன் காரணமாக போதுமான நடவு செடிகள் கிடைப்பது இல்லை.