An open source content management platform.
நாற்றங்கால் நுட்பங்கள்
உயர்தரமான விதைகளை, விதைத் தோட்டங்கள் மற்றும் சிறந்த பண்புகள் பெற்றுள்ள மரங்களில் இருந்து சேகரிக்க வேண்டும். ஏப்ரல், ஜுன் மாதங்களில் விதைகள் இருக்கும். ஜுலை மாதத்தில் இயல்பாகவே செடிகள் முளைக்க தொடங்கும். இலேசாக விதைக் கொப்புகள் இருப்பதால் காற்றில் எளிதில் பரவக் கூடும். கவனமுடன் சேகரித்து, உலர்த்திய பின்பு டப்பாக்களில் காற்றுப்புகா வண்ணம் சேகரித்து வைக்கலாம் விதைகள் 4-5 மாதங்கள் வரை முளைப்பு திறன் கொண்டிருக்கும். தக்க முறையில் சேகரித்து வைத்தால் 8 மாதங்கள் வரை முளைக்கும் திறனோடு இருக்கும். ஒரு கிலோவில் 8,000-10,000 விதைகள் இருக்கும். இதன் மூலம் 3,000க்கு குறையாமல் தரமான நாற்றுகளை பெற முடியும்.
காற்றோட்டமும், வடிகால் வசதியும் உள்ள நாற்றங்கால் மேட்டுப் பாத்திகளில் ஜுலை-ஆகஸ்ட் மாதங்களில் விதைகளை ஊன்றலாம். பாலித்தின் பைகளிலும் நேரடியாக விதைக்கலாம். ஒரு சதுர மீட்டர் பரப்புள்ள பாத்திக்கு 15 கிராம் விதைகள் தேவைப்படும். விதைத்த 8-10 நாட்களில் முளைப்பு விடத் தொடங்கும். எவ்வித விதை முன் நேர்த்தியும் தேவையில்லை. விதை முளைப்பு சதவீதம் 60-70% இருக்கிறது 1½ மாதங்களுக்கு பிறகு தாய் பாத்திகளில் இருந்து நாற்றுகளை பிடுங்கி, பிளாஸ்டிக் கொள்வான்களில் நட்டு, நடவுக்கு தயார் ஆகும் வரை பராமரிக்க வேண்டும். இவ்வகை விதை வழி உருவான செடிகள் நடவுக்கு எடுத்து செல்லப்படலாம்.
குளோனல் இனப்பெருக்கம்
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த தாய் மரங்களை தரைக்கு மேல் வெட்டி விட்டு, பூஞ்சைக் கொல்லி மருந்தை தடவி விட வேண்டும். துளிர்கள் 45 நாளில் நல்ல வளர்ச்சியுடன் பிடித்து, பசுமையாக வளர்ந்த பின்பு, 5-10 செ.மீ. நீளம் உள்ளவாறு அதிகாலை அல்லது பின் மாலை நேரத்தில் வெட்டி எடுத்து வர வேண்டும் பின் 0.05% பாவிஸ்டின் கரைசலில் நனைத்து அதன் பின்னர் 1000-6000 செறிவுள்ள IBA வளர்ச்சி ஊக்கியில் நேர்த்தி செய்து, வெர்மிகுலைட் ஊடகத்தில் ஊன்றி வைக்க வேண்டும். இத்தகைய வெர்மிகுலைட் அடுக்குகளை பின் பாலித்தீன் கூடாரத்தில் வைத்து 3-4 வாரங்கள் பராமரிக்க, வேர் பிடிக்க தொடங்கும். ஆரம்ப வெப்பநிலை 26-36o C செல்சியஸ் மற்றும் 80-100% ஈரப்பதம் இருக்கும்படி பராமரிக்க வேண்டும். காய்ந்த மற்றும் இறந்த குச்சிகளை நீக்கிவிட வேண்டும். வேர் பிடித்த குச்சிகளை நீக்கிவிட வேண்டும். வேர் பிடித்த குச்சி செடிகளை, கடினப்படுத்தி, 3 மாதங்களுக்கு பிறகு நடவுக்கு பயன்படுத்தலாம்.
நிலத் தயாரிப்பு
காற்றறையுள்ள மணல் பாங்கான நிலத்தில் பெருமரம் நன்கு வளரும். தக்க ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில், சரிவான நிலங்களிலும், கல் நிறைந்த பகுதிகளிலும் வளரக் கூடியது. 2 அடி ஆழம் வரை மண்ணை இயந்திரக் கலப்பை கொண்டு 2-3 தடவை உழவு செய்ய வேண்டும்.
நடவு செய்தல்
1 முதல் 1½ கன அடி அளவுள்ள குழிகளை 3மீ X 3மீ முதல் 5மீ X 5மீ இடைவெளி வரை எடுக்கலாம். விதைச் செடிகளையோ, குளோனல் கன்றுகளையோ நடவு செய்யலாம். வேர்ப் பகுதியை விட தண்டுப்பகுதி இரு மடங்கு இருக்கும் செடிகள் மிகவும் ஏற்றவை. பொதுவாக 50-100 செ.மீ உயரமுள்ள செடிகளை தேர்ந்தெடுத்து நடலாம்.