சாகுபடி முறை

உரமிடல்
பெருமரத் தோப்புகளுக்கு அங்கக மற்றும் இரசாயன உரமிடல் தேவைப்படுகிறது. வெப்பமண்டலப் பகுதி மற்றும் மணல் சார்ந்த பகுதிகளில் செடிக்கு 20 கிராம் என்ற அளவில் யூரியா இடலாம். இதனால் 24% வளர்ச்சி கூடுதலாகிறது. இரண்டாம் ஆண்டில் உரத்தின் பயன்பாடு குறைகிறது. மணல் பகுதிகளில் நடவுக்கு முன் குழிகளில் ஒரு தடவை மட்டும் 40 கிராம் பாஸ்பேட் இடுவது செடிகளில் கழுத்துப் பகுதி பெருக்கமடைய உதவுகிறது.

தோப்பு நிர்வாகம்
ஈரப் பகுதிகளில் பாசனம் தேவையில்லை. வறண்ட பகுதிகளில் தேவைப்படுகிறது. முதல் இரண்டு ஆண்டுகளில் களையெடுத்து விடுவது வளர்ச்சிக்கு உதவுகிறது. பிறகு ஆண்டுக்கு ஒரு முறை போதுமானது. பக்க கிளைகளை கவாத்து செய்வதும் வறண்ட கிளைகளை நீக்குவதும் நேரான தடி வளர்ச்சிக்கு அவசியம். 3 மற்றும் 4-வது ஆண்டுகளில் வளர்ச்சி குன்றிய மரங்களை நீக்குவது நல்லது. தேவையான பகுதிகளில் வேலி அமைக்க வேண்டும்.

வேளாண் காடு வளர்ப்பு
வேளாண் பயிர்களுடன் பெருமரத்தை இணைத்து சாகுபடி செய்வது பரவலாக உள்ளது. கோதுமை, சிறுதானியங்கள், பார்லி மற்றும் கடுகு ஆகிய பயிர்களுடன் பெருமரத்தை வேளாண் காடு வளர்ப்பு செய்யலாம்.