அறுவடை

அறுவடை மற்றும் மகசூல்  
இம்மரத்திற்கு குறிப்பிட்ட அறுவடைக் காலம் கிடையாது. தீக்குச்சி தொழிற்சாலைகளுக்கு 6-8 ஆண்டுகள் வயதுடைய மரங்கள் ஏற்றவை. 15 செ.மீ. சுற்றளவுக்கு மேல் வளர்ந்துள்ள எல்லா கிளைகளும் தீக்குச்சி உற்பத்திக்கு உகந்தவை. அறுவடை செய்யப்படும் மரங்கள் தரையில் இருந்து 15 செ.மீ. சாய்வான வாக்கில் மின்சார ரம்பத்தால் அறுத்து எடுக்க வேண்டும். இந்த வேர் கட்டையிலிருந்து மறுதாம்பு துளிர்த்து வளர்ந்து, இரண்டாம் அறுவடைக்கு தயாராகும். மரத்தை அறுவடை செய்த 3 நாட்களுக்குள் ஆலைக்கு கொண்டு செல்ல வேண்டும். 15 நாட்களுக்கு பின் அவை நிறமிழந்து, தொழிற்சாலைகளுக்கு பயன்படாமல் போய்விடும்.


 

மகசூல் ஒப்பீடு (ஹெக்டருக்கு)