An open source content management platform.
நடவு
மண் வகை : மணல் பாங்கான நிலம் மிகவும் ஏற்றது. களிமண், சுண்ணாம்பு தன்மையுள்ள மண் மற்றும் மலைப்பாங்கான மண் வகையிலும் வளரக் கூடியது.
இடைவெளி : 4 மீ x 4 மீ. ஒரு ஏக்கருக்கு 250 நாற்றுகள் நடவு செய்யலாம்.
குழி அளவு : குறைந்தது 2 கன அடி
விதையை கையாளும் முறைகள்
விதை சேகரிப்பு:
ஜுலை - ஆகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்கள்
விதை நேர்த்தி:
பழத்தின் ரப்பர் போன்ற தோலினை நீக்குவதன் மூலம் முளைப்புத்திறனை 20 மடங்கு அதாவது 95-100 சதவீதத்திற்கு அதிகப்படுத்தலாம்.
நாற்று உற்பத்தி:
செம்மண், மணல், தொழுஉரம் இவற்றை 2:1:1 என்ற விகிதத்தில் கலந்து 13 செ.மீ x 25 செ.மீ பாலித்தீன் பைகளில் நிரப்பி விதைகளை 1 செ.மீ ஆழத்தில் ஊன்ற வேண்டும். ஒரு நாளுக்கு 2 முறை நீர்த் தெளித்து நிழலில் பாதுகாக்க வேண்டும். பாலித்தீன் பைகளில் உள்ள நாற்றுகளை 10 நாட்கள் வரை நிழலில் பராமரித்த பின், திறந்தவெளியில் வைத்து கடினப்படுத்த வேண்டும். சுமார் 3 மாதம் கழித்து நடவுக்கு தயாராக இருக்கும்.
உலர்த்துதல்:
நாற்று உற்பத்திக்கு, அதிகப் படியான உலர்த்துதல் விதையின் தன்மையை பாதிப்பதால் குறைவான மற்றும் பாதுகாப்பான ஈரப்பதத்துக்கு உலர்த்துதல் உகந்தது. 1-2 நாட்களுக்கு நிழலில் உலர்த்துதல் மிகவும் ஏற்றது.
சேமிப்பு முறை:
தோல் நீக்கப்பட்ட விதைகளை மண்பானையில் வைத்து பருத்தி துணியால் மூடி ஈர மணல் நிரப்பப்பட்ட வாளியில் வைக்க வேண்டும். சேமிப்பு காலம் முழுவதும் ஈர மணல் நிரப்பப்பட்ட வாளியில் வைக்க வேண்டும். இது விதையின் ஈரப்பத்தை சமமாக வைக்க உதவும். இந்த விதைகள் 4-6 மாதங்கள் வரை 95 சதவீதம் முளைப்புத் திறனுடன் இருக்கும்.