An open source content management platform.
அறுவடை
10 ஆண்டு வயதுள்ள மரத்தில் சராசரியாக 12 கிலோ விதைகள் கிடைக்கும். இது படிப்படியாக ஆண்டுகள் செல்ல செல்ல உயரும். இதிலிருந்து 3 கிலோ விதைப் பருப்பு கிடைக்கும். இதன் மூலம் ஒரு மரத்திலிருந்து 2.1 லிட்டர் எண்ணெய் பெறலாம்.
4மீ x 4மீ இடைவெளியில் 35 மரங்களை சாகுபடி செய்திருந்தாலே 75 லிட்டர் புன்னை எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும். குளோனல் செடிகள் சாகுபடி மூலம் 4-5 ஆண்டுகளில் விதைகள் கிடைக்கும்.
ஒரு மரத்திலிருந்து புன்னை விதைக் கொட்டை மகசூல்
| 4 - 5ஆண்டுகள் | 4 முதல் 6 கிலோ |
| 10 ஆண்டுகள் | 10 முதல் 60 கிலோ |
| 20 ஆண்டுகள் | 50 முதல் 150 கிலோ |
உள்ளூர் சந்தையில் சுத்திகரிக்கப்படாத புன்னை எண்ணெயின் சந்தை மதிப்பு: ரூ. 300/லிட்டர்
ஒரு கிலோ புண்ணாக்கின் விலை : ரூ. 40/-
ஒரு கிலோ புன்னை பருப்பின் விலை : ரூ. 30/-