அறிமுகம்

புன்னையின் தாவரவியல் பெயர் கேலோஃபில்லம் இனோஃபில்லம் ஆகும். இது ஒரு எண்ணெய் வித்து மரப்பயிர் ஆகும். இதன் விதைப் பருப்பில் 55 விழுக்காடு எண்ணெய் உள்ளது. இது உயிர்ம எரிபொருளாகவும் (Biodiesel) தோல் நோய்களுக்கு மருத்துவ எண்ணெயாகவும், சலவைக்கட்டிகள் தயாரிக்கவும் பயன்படுகிறது. இதன் புண்ணாக்கு உரமாக பயன்படுகிறது. கடலோரப் பகுதிகளில் காற்றுத் தடுப்பானாகப் பயன்படுகிறது. சாலையோரங்களில் நிழல் தரும் மற்றும் அழகு சேர்க்கும் மரமாகவும் நடவு செய்யலாம். தென்னையுடன் ஊடு பயிராக சாகுபடி செய்ய ஏற்றது. சுமார் 6 ஆண்டுகளில் மரம் முதிர்ச்சி அடைந்து பலன் தருகின்றது.