பூச்சி, நோய் நிர்வாகம்

பூச்சி நோய் நிர்வாகம்

      இலையுண்ணிகள் (ஹப்பிளியா ப்யூரோ) இலை சுரண்டும் பூச்சிகள் (யூடெக்டோனோ மேக்ராலிஸ்) ஆகியவை முக்கியமாக தேக்கை தாக்கும் பூச்சிகள் ஆகும். நாற்றங்கால் செடிகளிலும், தோப்பு மரங்களிலும் இவை அதிக பாதிப்பை உண்டாக்கும். தொடர் கண்காணிப்பும், தாக்குதல் அறிகுறி தெரிந்தவுடன் புழுப் பருவத்திலேயே நீக்கி அழிப்பதும் அவசியம். அதிக பாதிப்பு ஏற்பட்டிருப்பின் மோனோ குரோட்டோபாஸ் அல்லது எண்டோசல்பான் (2.5 - 3 மி.லி / 1 லி. நீர்) அல்லது நீம் அசால் 1%  (3.4 மி.லி. / 1 லி. நீர்) கரைசல் ஏதேனுமொன்றை இலைகளின் மேல் 10-15 நாட்கள் இடைவெளியில் தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம் NPV வைரஸ் சார்ந்த உயிர்க்கொல்லி மூலமாகவும் சில இலையுண்ணிகளை கட்டுப்படுத்தலாம்.