சாகுபடி முறை

பாசனம்

ஆரம்பகட்டத்தில் வாரம் ஒருமுறை பாசனம் செய்ய வேண்டும். சீராக களை எடுப்பு கவாத்து செய்து வர வேண்டும். மைய தண்டுக்கு சேதம் ஏற்படாமல் பக்க கிளைகளை நீக்கி விட வேண்டும். சொட்டு நீர்ப்பாசனம் மிகவும் ஏற்றது.

சீரான பாசனம் சாகுபடி காலத்தை குறைப்பதோடு உற்பத்தி திறனையும் கூட்டுகிறது. தேவைக்கு அதிகமாக நீர் பாய்ச்சும் போது மரம் மிக வேகமாக வளர்ந்து பலவீனம் அடைந்து காற்றில் உடைய வாய்ப்பு ஏற்படும். நீர்க் கொப்புளங்கள் ஏற்படும். எளிதில் பூஞ்சைத் தாக்குதலுக்கு இலக்காகி மடியக் கூடும். எனவே தேக்கில் பாசனம் செய்யும் போது கவனம் தேவை.

தோப்பு நிர்வாகம்

    6 மாதங்களுக்கு பிறகு மரத்திற்கு 50 கிராம் யூரியா மற்றும் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட் இட வேண்டும். 2 வருடம் கழித்து 75 கிராம் யூரியா மற்றும் 60 கிராம் சூப்பர் பாஸ்பேட் இடுவதன் மூலம் நல்ல மர வளர்ச்சியை பெற முடியும். 5 மற்றும் 10 ஆண்டுகளில் அடுத்து அடுத்த வரிசையை நீக்கி விட வேண்டும். கேரளாவில் 5, 10, 15, 20, 30 ஆகிய ஆண்டுகளில் மரக்கலைப்பு நடைமுறையில் உள்ளது. பண்ணை நிலங்களில் வரப்பு ஓரங்களில் தென் வடலாக தேக்கு நடவு செய்யலாம்.

        மரப் பண்புகளை பொருத்தவரை 25-30 வயதுள்ள மரங்களுக்கும் 50-60 வயதுள்ள மரங்களுக்கும் அதிக வேறுபாடு காணப்படுவதில்லை. எனவே தரமான நடுப்பொருள் வரிசையான இடத்தேர்வு, கட்டுப்பாடான பாசனம் மற்றும் பொருத்தமான தோப்பு நிர்வாக முறைகளை கையாளுவதன் மூலம் 20-25 ஆண்டுகளில் தேக்கை அறுவடை செய்யலாம். பிரேசில் மற்றும் மலேசிய நாடுகளில் தேக்கு 15-20 ஆண்டுகளில் அறுவடை செய்யப்படுகிறது.