An open source content management platform.
வேர்க்கிழங்கு
ஒரு ஆண்டு வயதுடைய செடிகளை நாற்றங்காலில் இருந்து பிடுங்கி இலைகள் மற்றும் பக்கவாட்டு வேர்களை நீக்கிவிட வேண்டும். கழுத்து பகுதிகளில் இருந்து 4-6 செ.மீ மேல்தண்டுபகுதியும் 15-20 செ.மீ ஆணிவேர்ப்பகுதியும் உடைய வேர்க்கிழங்கு கரணையை தயாரிக்கலாம் இந்தியாவில் வேர்க்கிழங்கு நடவே பெரிதும் பயன்பாட்டில் உள்ளது. இதனை நடவு செய்யப்படும் இடத்திற்கு கொண்டு செல்வதும் எளிது.
விதைத் தோட்டங்கள், விதை உற்பத்தித் தோப்புகள் போன்ற விதைகளின் அறியப்பட்ட இருப்பிடத்தில் இருந்து நல்ல தரமான பழங்கள் மூலம் உருவாக்கப்படும் விதை கரணைகள் சிறந்த பண்புகளைக் கொண்டிருக்கும்.
தேக்கு விதைகளின் வம்சாவளிப் பண்புகளான வேறுபட்ட காலங்களில் பூத்தல், குறைவான காய் உற்பத்தி, பழங்களில் விதை வெற்றிடம் மற்றும் குறைவான முளைப்புத் திறன் ஆகியவற்றால் விதைக் கரணைகள் உற்பத்தியில் போதாமை நிலவுகிறது. ஆகவே மாற்று நடவுப் பொருள் உற்பத்தி முறைகளை கையாள வேண்டும்.
வழக்கமான தேக்கு நடுபொருள் உற்பத்தியில் உள்ள சிக்கல்களை சமாளிக்க வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், நுண் இனப் பெருக்க முறை மூலம் துளிர்களில் இருந்து தேக்கு நாற்றுகளை உற்பத்தி செய்யும் செயல்முறைகளை ஆராய்ந்து கண்டறிந்துள்ளது. விரும்பத்தக்க பண்புகளைக் கொண்ட தாய் மரங்களில் இருந்து குளோனல் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. பெருமளவு இனப்பெருக்கம் செய்யும் போது விவாயிகளின் நாற்றுத் தேவைகளை சமாளிக்க முடிகிறது. விவசாயிகளிடையே விழிப்புணர்வை உருவாக்க இந்நிறுவனம் பல்வேறு கள விளக்கப் பண்ணைகளை நிர்வகித்து வருகிறது.
நல்ல மண்வளமும் ஆண்டு மழைப்பொழிவும் 1200 மி.மீட்டருக்கு மேலும் உள்ள நிலம் தேக்கு வளர்ப்புக்கு மிகவும் ஏற்றது. நிலத்தை நன்கு உழுத பின் 1 1/2கனஅடி அளவுள்ள குழிகளை 2 x 2 மீட்டர் அல்லது 3 x 3 மீட்டர் அல்லது 3 x 4 மீட்டர் இடைவெளியில் மழைக்காலத்திற்கு முன்னதாக குழிகளைத் தயார் செய்ய வேண்டும்.
நடவு குழியில் தொழு உரம் - மண் கலவையை நிரப்ப வேண்டும். மழைக்காலத்தில் நடவு செய்வது சிறப்பு. விதைக்கிழங்கை கடப்பாறையில் துளையிட்டு நடவு செய்யலாம். நட்ட பின்பு மண்ணை நன்கு அணைத்து விட வேண்டும்.
நாற்றுகள் கிடைக்குமிடம்
தரமான நடுபொருள்களை உற்பத்தி செய்து விவாயிகளுக்கு தொடர்ந்து வழங்குவதற்காக அதிநவீன நாற்று உற்பத்தி கூடங்கள் எமது நிறுவனத்தில் செயல்பட்டு வருகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட தேக்கு குளோன்களில் திசு வளர்ப்பு மூலம் பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. உயர்தர தேக்கு கன்றின் விலை ரூ.25/- ஆகும். விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த கள ஆய்வு மேற்கொண்டதில் சாதகமான முடிவுகள் பெறப்பட்டுள்ளன.
நபார்டு மாதிரி தேக்கு தோப்பு வளர்ப்பு வடிவம் : சாகுபடி கணக்கீடு
ஒரு எக்டர் பரப்பில் 2 X 2 மீட்டர் இடைவெளியில் (எக்டருக்கு 2500 செடிகள்) நடவு செய்யப்பட்ட தோப்பின் சாகுபடி கணக்கீடு கீழே தரப்பட்டுள்ளது.
இடைவெளி : 2 X 2 மீட்டர்
இடை நாற்று நடவு : 20%
கூலி : ரூ.50 / நாள்
நாற்றுப்பிழைப்பு விகிதம் = 2000 / எக்டர்