அறிமுகம்

உலகின் மதிப்பு வாய்ந்த மர இனங்களில் தேக்கும் ஒன்றாகும். இந்தியாவில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, ஒரிஷா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், உத்திரப்பிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இயல்பாகக் காணப்படுகிறது.

உலகில் இந்தியா, மியான்மர், லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் இயற்கை காடுகளில் பரவலாகக் காணப்படுகிறது. தேக்கு மரச்சாமான்கள், அறைக்கலன்கள் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பில் பெரிதும் பயன்படுகிறது. இந்தியாவின் முக்கியமான மர வகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

தாவரவியல் பண்புகள்

        இது இலையுதிர் மரவகை ஆகும். இது வெளிச்சம் அதிகம் விரும்பும் மரம் ஆகும். வளரும் இடத்தை பொருத்து சராரியாக 50 ஆண்டுகளில் சுமார் 20-35 மீட்டர் உயரம் வளரக் கூடியது. நவம்பர் முதல் ஜனவரி வரை இலைகள் உதிர்த்து நீண்ட நாட்களுக்கு இலையின்றிக் காணப்படும். ஏப்ரல் முதல் ஜூன் வரை புதிய இலைகள் தோன்றும். காய்கள் நவம்பர் முதல் ஜனவரி வரை பழுத்துக் காணப்படும். ஒரு கிலோ எடைக்கு 1150 முதல் 2800 காய்கள் இருக்கும். அநேகமாக எல்லா காய்களும் ஒரே ஒரு நன்கு வளர்ச்சியடைந்த விதையைத் தருகின்றன.