பூச்சி, நோய் நிர்வாகம்

நோய், பூச்சித் தாக்குதல்

விவசாய நிலங்களில் பொதுவாக பூச்சித் தாக்குதல் சவுக்கின் மகசூலை பாதிக்கும் அளவுக்கு ஏற்படுவதில்லை. ஆனால் இலைகள் மஞ்சளாதல், காய்ந்து போதல் ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள வேளாண் அறிவியல் நிலையங்களையோ அல்லது வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தையோ தொடர்பு கொண்டு உரிய கட்டுப்படுத்தும் முறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.