An open source content management platform.
சாகுபடி முறை
மணிச்சத்து குறைவாக உள்ள இடங்களில் குழிக்கு 5 கிராம் சூப்பர் பாஸ்பேட் அடியுரமாக இடலாம். மழை இல்லாத காலங்களில் வாரத்துக்கு ஒரு முறை தண்ணீர் விட வேண்டும். முதல் ஆறு மாதங்களுக்குப் பின் மானாவாரியாகவும் வளர்க்கலாம். முதல் வருடத்தில் இடத்துக்கேற்ப மூன்று முதல் நான்கு முறை களையெடுக்க வேண்டும். ஊடுபயிராக வேர்க்கடலை, உளுந்து போன்றவற்றை பயிரிட்டு களையைக் கட்டுப்படுத்துவதுடன் கூடுதல் வருவாயும் பெறலாம். பக்கக் கிளைகளை 6,12 மற்றும் 18ஆம் மாதங்களில் கழிக்க வேண்டும்.
சவுக்கு, நுண்ணுயிர் உதவியுடன் காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகிப்பதால் அதிகமான அளவில் உரமிடல் தேவையில்லை. மண் வளத்திற்கேற்ப உரத் தேவை மாறுபடும் என்றாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள (அட்டவணை 1 - 2) பொதுவான உரமிடும் முறையைப் பின்பற்றலாம்.
அட்டவணை 1 :
நீரில் கரையக் கூடிய உரமிடல் (வளமான மண் உள்ள நிலத்திற்கு)
உரம் வயது (மாதங்கள்)
*உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து செடிக்கு 100 மி.லி. வீதம் வழங்கலாம். சாம்பல் சத்து குறைவாக உள்ள இடங்களில் ஏக்கருக்கு 10 கிலோ பொட்டாஷ் இடலாம்.
அட்டவணை 2 :
திட உரமிடல்
* ஏக்கருக்கு 1750 மரங்கள் என்ற அடிப்படையில். உரத்தை ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 50 மிலி. வேப்ப எண்ணெயுடன் நன்கு கலந்து அளிக்க வேண்டும்.
புதிய குளோன்கள் விதையில்லா இனப்பெருக்க முறையில் உற்பத்தி செய்யப்படுவதால், நடவுக்குப் பின் ஒரு தோப்பில் உள்ள எல்லா மரங்களும் ஒரே மாதிரியான வளர்ச்சியைக் கொண்டிருக்கும். வேகமாக வளர்வதுடன், நேரான கம்பங்கள் உள்ளதால் சந்தையில் அதிக விலை கிடைக்கிறது. பொதுவாக இக் குளோன்கள் வறட்சியைத் தாங்குவதுடன், நோய், பூச்சித் தாக்குதல் ஆகியவற்றால் பாதிப்படைவதில்லை. விதைப் பண்ணைகளிலிருந்து பெறப்பட்ட வீரிய விதைகளைக் கொண்டும் தரமான தோப்புகளை உருவாக்கலாம்.
புதிய இரகங்கள்
கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியின் வழியாக அதிக விளைச்சல் தரக் கூடிய இரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அட்டவணை 3 இல் கொடுக்கப்பட்டுள்ள புதிய இரகங்களை இடத்தின் தன்மைக்கேற்பவும், பயன்பாட்டின் அடிப்படையிலும் தெரிவு செய்து பயன்படுத்தலாம்.
அட்டவணை 3 :