அறிமுகம்

சவுக்கு தென்னிந்தியாவில் மிகப் பரவலாக வளர்க்கப்படும் குறுகிய காலப் பயிர் ஆகும். எல்லா மண் வகைகளிலும் (களர், உவர் நிலங்கள் உட்பட) வளரும் தன்மையுடையது. காற்றிலுள்ள தழைச்சத்தை நுண்ணுயிர் உதவியுடன் மண்ணில் நிலைநிறுத்துகிறது. காகிதம் தயாரிக்கவும், காம்புகள், விறகு போன்றவற்றிற்கும் பயன்படுகிறது. காற்றுத் தடுப்பானாகவும், இடைபடு காடுகளாகவும் பயன்படுத்தப்படுகிறது. எளிமையான சாகுபடி முறை, குறைவான ஆள் தேவை, நோய், பூச்சித் தாக்குதல் இல்லாமை, சந்தைத் தேவை, இலாபகரமான விலை ஆகிய காரணங்களுக்காக விவசாயிகளால் விரும்பி வளர்க்கப்படுகிறது.