அறுவடை

அறுவடை

நடவு செய்த 5 முதல் 6 ஆண்டுகளில் அறுவடை செய்யும் போது குமிழ் மரத்தின் சுற்றளவு  சுமார் 40 முதல் 50 செ.மீ. வரை இருக்கும். ஒரு ஏக்கருக்கு 30 முதல் 40 டன் விளைச்சல் கிடைக்கும். இதன் மூலமாக இரண்டு முதல் மூன்று லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.

குமிழ் மரத்தினை ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் அறுவடை செய்யும் போது மரத்தின் சுற்றளவு 90-120 செ.மீ. வரையிலும், உயரம் 15-25  மீட்டர் வரையிலும் இருக்கும். 

மரத்தின் சுற்றளவு அதிகம்  இருப்பதால் மரச்சாமான்கள், கட்டில்கள், மேசைகள் செய்யப் பயன்படுகிறது.

குமிழ் மரத்தை எட்டு முதல் பத்து ஆண்டுகளில் அறுவடை செய்யும் போது ஒரு மரம் 500-800 கிலோ வரையிலும் இருக்கும். ஒரு ஏக்கருக்கு 9-10 லட்சம் வரை வருமானம் கிடைக்கும்.

பின் குறிப்பு :
மேற்கண்ட செலவு மற்றும் வருமானம் ஆகியன நிலத்தின் தன்மை, கால நிலை, இரகம், உரம்,நீர், பூச்சி நோய் மேலாண்மை மற்றும் சந்தை நிலவரத்தை பொறுத்து மாறுபடும்.